கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் யோகா தினவிழா
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் ஈஷா யோகா பயிற்சியாளர்களை கொண்டு யோகாசனம் கற்றுத்தரப்பட்டது.
கரூர்,
கல்லூரி செயல் இயக்குனர் எஸ்.குப்புசாமி, முதல்வர் என்.ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர் முகமதுபரித் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் கரூர் சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் லாலாப்பேட்டை, தரகம்பட்டியில் உள்ள அரசு பள்ளிகளிலும் யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கரூர் புன்னம் சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் யோகா தின விழா நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட முதியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான தங்கவேல் தலைமை தாங்கினார். பின்னர் அங்குள்ள முதியோருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் சத்தியசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அந்த இல்லத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Tags :
Next Story