திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை: திண்டுக்கல் கோர்ட்டில் 2 பேர் சரண்


திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை: திண்டுக்கல் கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 23 Jun 2018 3:30 AM IST (Updated: 23 Jun 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

திண்டுக்கல்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் இருளாண்டி மகன் துரைப்பாண்டி (வயது 35). இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வலையன்குளம் வழியாக சோளங்குருணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த 4 பேர் துரைப்பாண்டியை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பி சென்றவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், கொலையில் தொடர்புடைய மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ்குமார் (21), சுபேர் அலி (21) ஆகியோர் நேற்று திண்டுக்கல் 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் சரண் அடைந்தனர். இதையடுத்து, அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில், இரண்டு பேரையும் போலீசார் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.


Next Story