தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
வாய்மேடு அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேடு-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வாய்மேடு போலீஸ் நிலையம் அருகில் உடையதேவன்காடு செல்லும் சாலை உள்ளது. உடையதேவன்காடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு வாய்மேடு பகுதியில் இருந்து சாலையின் ஓரத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதிக்கு செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். உடையதேவன்காடு பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையின் வழியாகத்தான் வாய்மேடு வந்து அங்கிருந்து செல்கின்றனர்.
எனவே இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். இந்த மின் கம்பி சாலையின் ஓரத்திலும், வயல் கரையிலும் உள்ளதால் அதிகமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் வந்தவுடன் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வார்கள். அப்போது மின் கம்பி கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளதால் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படுவதற்குள் உடையதேவன்காடு செல்லும் சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story