இரட்டிப்பு வருமானத்துக்கு பதில் விவசாயிகளின் தற்கொலைகள் தான் இரு மடங்கு அதிகரித்துள்ளது மோடி மீது சிவசேனா பாய்ச்சல்


இரட்டிப்பு வருமானத்துக்கு பதில் விவசாயிகளின் தற்கொலைகள் தான் இரு மடங்கு அதிகரித்துள்ளது மோடி மீது சிவசேனா பாய்ச்சல்
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

இரட்டிப்பு வருமானத்துக்கு பதில் விவசாயிகளின் தற்கொலை தான் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடியை சிவசேனா விமர்சித்து உள்ளது.

மும்பை, 

இரட்டிப்பு வருமானத்துக்கு பதில் விவசாயிகளின் தற்கொலை தான் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடியை சிவசேனா விமர்சித்து உள்ளது.

காணொலி காட்சி கலந்துரையாடல்

பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை காணொலி காட்சி மூலம் நாடுமுழுவதும் 600 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது வேளாண்துறை பட்ஜெட்டை ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வருகிற 2022–ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்தநிலையில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னாவில்’ இது குறித்து கூறியிருப்பதாவது:–

விவசாயிகள் தற்கொலை

மத்திய அரசின் தொடர்ச்சியான அறிவிப்புகளால் நாட்டு மக்கள் சோர்வடைத்துள்ளனர். 2022–ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்னும் தற்போதைய அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. பிரதமர் மோடி பழைய கேசட்டை தான் மீண்டும் ஓட்டியிருக்கிறார். கடந்த 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இதே வாக்குறுதியை பா.ஜனதா கூறியுள்ளது. இது ஆட்சியை கைப்பற்றவும் உதவியது.

கடன் மோசடி செய்யும் தொழில் அதிபர்களுக்கு வங்கிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றன. ஆனால் விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில்லை. இது மிகவும் பாரபட்சமானது.

வருமானம் இரட்டிப்பாவதற்கு பதிலாக விவசாயிகளின் தற்கொலைகள் தான் தற்போதைய ஆட்சியில் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story