சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி திருமாவளவன் வழக்கு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கடந்த மே 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட 5 வழக்குகள் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை ஏற்க முடியாது.
கலவரத்துக்கு முக்கிய காரணமாக இருந்த போலீசாரே, அது தொடர்பான வழக்கை விசாரிப்பது என்பது நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்காது. ஏனெனில், துப்பாக்கி சூடு வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் தான், மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர்.
எனவே, இந்த ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புள்ள உயர் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்த முடியாது. அப்பட்டமான இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தவறு செய்த பிற போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது? எதற்காக நடத்தப்பட்டது? என்ற உ
ண்மை வெளியே வரும்.
எனவே, இந்த ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story