மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு இணை மந்திரி அந்தஸ்து அரசாணை வெளியீடு
மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோணிக்கு இணை மந்திரி அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோணிக்கு இணை மந்திரி அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அட்வகேட் ஜெனரல்
மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் அசுதோஷ் கும்பகோணி. இந்தநிலையில் இவருக்கு இணை மந்திரி அந்தஸ்து வழங்கி மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதன் மூலம் அவருக்கு மந்திரிகளுக்கான சலுகைகள் வழங்கப்படும்.
என்னென்ன சலுகைகள்?
அசுதோஷ் கும்பகோணிக்கு அரசு குடியிருப்பு, ரூ.20 லட்சம் மதிப்புடைய அரசு கார் மற்றும் அதற்கு ஒரு டிரைவர், மாதம் ரூ.3 ஆயிரம் தொலைக்காட்சி கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதேபோல சிவசேனா கட்சி பிரமுகரும், மும்பை சித்தி விநாயகர் கோயில் அறங்காவலருமான ஆதேஷ் பன்டேகருக்கும் சமீபத்தில் இணை மந்திரி அந்தஸ்த்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story