பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷ வாயு தாக்கி சாவு
பல்லாவரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷ வாயு தாக்கி இறந்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இதை பராமரிக்கும் பணியை ஒப்பந்ததாரர் ராஜேஷ் கண்ணா செய்து வருகிறார். இவருடைய தனியார் நிறுவனத்தில் வண்டலூர் ஓட்டேரியை சேர்ந்த இரணியப்பன் (வயது 26) வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பல்லாவரம் நகராட்சி கீழ்கட்டளை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் சாலையில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் இரணியப்பன் உள்ளிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட வந்தனர்.
அப்போது ஆள்வழி குழாய் உள்ள மூடியை தூக்கி அடைப்பை சரிசெய்யும் எந்திர குழாய்களை உள்ளே விடும் பணியில் இரணியப்பன் ஈடுபட்டார். திடீரென பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் அவர் தவறி உள்ளே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி அவர் இறந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவர் உடலை மீட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று இரணியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் பராமரிப்பு நிறுவன மேற்பார்வையாளர் மாரிமுத்துவை (26) கைது செய்தனர்.
இது குறித்து பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Tags :
Next Story