நிலம் பறிபோவதால் விவசாயிகள் கவலை மாந்தோப்பில் ஒப்பாரி வைத்த பெண்ணால் பரபரப்பு
8 வழி பசுமை சாலைக்கு சேலம் அருகே 5-வது நாளாக நிலம் அளவிடும் பணி நடந்தது. விவசாய நிலம் பறிபோவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மாந்தோப்பில் ஒப்பாரி வைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அளவிடும் பணி கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நேற்று 5-வது நாளாக நிலம் அளவிடும் பணி நடந்தது.
சேலம் அருகே உள்ள உடையாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் நேற்று காலை நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. இதில் நில எடுப்பு தாசில்தார் பெலிக்ஸ்ராஜா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் அங்கு நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் பதித்தனர்.
அந்த பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயி, தனது நிலத்தின் ஒரு பகுதியில் வீடு கட்டி மனைவி கன்னியம்மாள் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு வைத்து உள்ளார். அந்த நிலம் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து கந்தாஸ்ரமம் பின்புறம் வரகம்பாடி செல்லும் சாலையில் நில அளவீடு செய்யும் பணி நடந்தது. அப்போது அங்கிருந்த பெண்கள், விவசாயிகள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி (வயது 46) என்பவர் கூறும் போது, கடந்த 40 ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறோம்.
எங்கள் நிலத்தில் நெல், கடலை பயிரிட்டு உள்ளோம். அதே போன்று தென்னை மரம் வைத்து உள்ளோம். தற்போது இவை எல்லாம் பறிபோகிறது. நிலம் கையகப்படுத்தினால், நாங்கள் எங்கே போவோம் என்று தெரியவில்லை. மேலும் காடாக கிடந்த நிலத்தை மிகவும் சிரமப்பட்டு, எனது மாமனார் சுந்தரம் விவசாய நிலமாக மாற்றினார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது சமாதியும் இங்கு தான் உள்ளது. அதனையும் அகற்றுவதாக கூறுகிறார்கள். எனவே அவரது சமாதியை விட்டாலும் பரவாயில்லை. அந்த சமாதியில் ஆண்டுக்கு ஒரு முறை சாமி கும்பிட்டு வருகிறோம். மேலும் இந்த நிலத்தை தான் நம்பி இருந்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று கூறினார்.
இதே போன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வள்ளி (60), பெருமாள் (67) ஆகியோர் கூறும் போது, எங்கள் விவசாய நிலத்தை தற்போது அதிகாரிகள் ரோடு போடுவதற்காக எடுப்பதாக கூறி அளந்து வருகின்றனர். கடந்த ஆண்டு தான் ரூ.3 லட்சம் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது நிலம் பறிபோனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர். விவசாய நிலங்கள் பறிபோவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மதியம் எருமாபாளையம் பகுதியில் நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நின்று கொண்டு நம் நிலம் நம்மை விட்டு போகப்போகிறதே என்று கூறி கதறி அழுததுடன், சோகமாக காணப்பட்டனர்.
இது குறித்து தாசில்தார் பெலிக்ஸ் ராஜாவிடம் கூறும்போது, வாழையடி தோப்பு பகுதியில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கும், கந்தாஸ்ரமம் பின்புறம் பகுதியில் 2½ கிலோ மீட்டர் தூரமும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிலம் அளவீடு செய்து முதல் கட்டமாக எல்லைக்கல் நடப்பட்டு உள்ளது என்றார்.
தற்போது கந்தாஸ்ரமம் பின்புறத்தில் இருந்து வரகம்பாடி செல்லும் மண் ரோடு உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த மண்ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் 8 வழி பசுமை சாலைக்கு இந்த மண் ரோடும் நேற்று அளவீடு செய்து எல்லைக்கல் பதிக்கப்பட்டது. பசுமை வழிச்சாலை நாமமலை, தெங்கல்காடுமலைகள் நடுவில் அமைய உள்ளது. எனவே இந்த மலைகளை குடைந்து சாலை அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிலம் அளவீடு செய்யும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் துணை கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்த போது கன்னியம்மாள் மாந்தோப்பில் உட்கார்ந்து, தோப்பு முழுவதும் பறிபோகிறதே, கடந்த சில ஆண்டுகளாகத்தான் மா அறுவடை செய்து அதை விற்று, அந்த பணத்தின் மூலம் பிழைப்பு நடத்துகிறோம். அதற்குள் எங்கள் வாயில் மண்ணை போட்டு விட்டீர்களே என்று கூறி ஒப்பாரி வைத்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தொடர்ந்து தேம்பி, தேம்பி அழுதார். இது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பின்னர் அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கந்தாஸ்ரமம் பின்புறம் வரகம்பாடி செல்லும் சாலையில் நில அளவீடு செய்யும் பணி நடந்தது. அப்போது அங்கிருந்த பெண்கள், விவசாயிகள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி (வயது 46) என்பவர் கூறும் போது, கடந்த 40 ஆண்டுகளாக இங்கே வசித்து வருகிறோம்.
எங்கள் நிலத்தில் நெல், கடலை பயிரிட்டு உள்ளோம். அதே போன்று தென்னை மரம் வைத்து உள்ளோம். தற்போது இவை எல்லாம் பறிபோகிறது. நிலம் கையகப்படுத்தினால், நாங்கள் எங்கே போவோம் என்று தெரியவில்லை. மேலும் காடாக கிடந்த நிலத்தை மிகவும் சிரமப்பட்டு, எனது மாமனார் சுந்தரம் விவசாய நிலமாக மாற்றினார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது சமாதியும் இங்கு தான் உள்ளது. அதனையும் அகற்றுவதாக கூறுகிறார்கள். எனவே அவரது சமாதியை விட்டாலும் பரவாயில்லை. அந்த சமாதியில் ஆண்டுக்கு ஒரு முறை சாமி கும்பிட்டு வருகிறோம். மேலும் இந்த நிலத்தை தான் நம்பி இருந்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று கூறினார்.
இதே போன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வள்ளி (60), பெருமாள் (67) ஆகியோர் கூறும் போது, எங்கள் விவசாய நிலத்தை தற்போது அதிகாரிகள் ரோடு போடுவதற்காக எடுப்பதாக கூறி அளந்து வருகின்றனர். கடந்த ஆண்டு தான் ரூ.3 லட்சம் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது நிலம் பறிபோனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர். விவசாய நிலங்கள் பறிபோவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மதியம் எருமாபாளையம் பகுதியில் நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நின்று கொண்டு நம் நிலம் நம்மை விட்டு போகப்போகிறதே என்று கூறி கதறி அழுததுடன், சோகமாக காணப்பட்டனர்.
இது குறித்து தாசில்தார் பெலிக்ஸ் ராஜாவிடம் கூறும்போது, வாழையடி தோப்பு பகுதியில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கும், கந்தாஸ்ரமம் பின்புறம் பகுதியில் 2½ கிலோ மீட்டர் தூரமும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிலம் அளவீடு செய்து முதல் கட்டமாக எல்லைக்கல் நடப்பட்டு உள்ளது என்றார்.
தற்போது கந்தாஸ்ரமம் பின்புறத்தில் இருந்து வரகம்பாடி செல்லும் மண் ரோடு உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த மண்ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் 8 வழி பசுமை சாலைக்கு இந்த மண் ரோடும் நேற்று அளவீடு செய்து எல்லைக்கல் பதிக்கப்பட்டது. பசுமை வழிச்சாலை நாமமலை, தெங்கல்காடுமலைகள் நடுவில் அமைய உள்ளது. எனவே இந்த மலைகளை குடைந்து சாலை அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிலம் அளவீடு செய்யும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் துணை கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story