கிருஷ்ணகிரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி
கிருஷ்ணகிரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் நிலோபர் கபில், பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கோவை மண்டல பயிற்சி இணை இயக்குனர் ரவிபாஸ்கர் வரவேற்றார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். இதில் கைப்பந்து, கால்பந்து, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் 3 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்படுகிறது.
நேற்றைய தொடக்க விழா நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், கிருஷ்ணகிரி முன்னாள் நகர் மன்ற தலைவர் தங்கமுத்து, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், கைவினைஞர் பயிற்சி இணை இயக்குனர் ராஜசேகர், மண்டல பயிற்சி இணை இயக்குனர்கள் ராஜகுமார், ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கோவை மண்டல விளையாட்டு துறையினர் செய்திருந்தனர். முடிவில் ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய காளிராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story