ஐக்கிய நாடுகள் பொது சேவை நாள்


ஐக்கிய நாடுகள் பொது சேவை நாள்
x
தினத்தந்தி 23 Jun 2018 12:36 PM IST (Updated: 23 Jun 2018 12:36 PM IST)
t-max-icont-min-icon

சமுதாயத்தில் பொது சேவையில் ஈடுபடுபவர்களை பரிசுகள் வழங்கி, பாராட்டி கவுரவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.

2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23-ந்தேதியை ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்நாளில் சிறப்பான பொதுசேவை செய்தவர்களுக்கு ஐ.நா. பொது சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இந்த விருதை பெற விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான பரிந்துரைகள் மேம்பட்ட பொது சேவை வழங்குவதற்கு பங்களிக்கும் புதுமையான முயற்சிகளை முன்வைக்கின்றன. மேலும் உலகெங்கிலும் இதேபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்கவும் வழிவகை செய்கிறது.

பொதுவேலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செயற்பாட்டின் பங்களிப்பை வலியுறுத்துவதற்கு அந்த நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உறுப்பு நாடுகளை ஐ.நா. ஊக்குவித்தது. சமுதாய மேம்பாட்டுக்காக பொது சேவையின் மதிப்பையும் தகுதியையும் கொண்டாட வேண்டும். அபிவிருத்தி செயல்பாட்டில் பொது சேவை பங்களிப்பை முன்னிலைப்படுத்த வேண்டும். பொது ஊழியர்களின் வேலைகளை அங்கீகரிக்க வேண்டும். பொதுத் துறையில் இளைஞர்களை தொடர ஊக்குவிக்க வேண்டும் என்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. ஒரு பொது சேவை விருது விழாவை நடத்துகிறது. அப்போது உலக அளவிலான பொது சேவை நிறுவனங்களின் ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பாராட்டி கவுரவப்படுத்துகிறது. ஐ.நா. பொது நிர்வாக நெட்வொர்க் பொது சேவை தினத்திற்கான சிறப்பு லோகோவைப் பயன்படுத்துகிறது. அதில் நீல நிறத்தில் மூன்று மனித உருவங்கள் இருக்கும். பொது சேவை என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். இன்று (ஜூன் 23-ந்தேதி) ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாளாகும். 

- ஹி.ஜே.ஜெனிபர்

Next Story