மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் மறியல் போராட்டம் 111 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர், அரியலூரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 111 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
நாமக்கல்லில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் பெரம்பலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலி யுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மறியலை கைவிடுமாறும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரித்தனர். ஆனால் தி.மு.க.வினர் மறியலை கைவிடவில்லை. இதை யடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 50 தி.மு.க.வினரை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியல் போராட்டத்தில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை, ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பஸ்நிலைய வாசலில் அமர்ந்து தமிழக கவர்னரை கண்டித்தும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 61 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனை வரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர். மறியல் போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், இளைஞர் அணி தலைவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, சவுந்தர், நகர செயலாளர் முருகேசன், கதிரவன், ராஜேந்திரன், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story