மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 75 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை, திருக்குவளையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
சென்னையில் நேற்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நாகை புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். அப்போது மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் போலீஸ்பன்னீர், தி.மு.க.வை சேர்ந்த பால்பாண்டியன், வீரபாண்டி, இளங்கோ, தென்னரசு, செல்வஆனந்தன், புலவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 15 பேரை கைது செய்தனர்.
இதே போல கீழையூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் திருக்குவளை கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் முன்னிலை வகித்தார். இதில் கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி நகர பொறுப்பாளர் மரியசார்லஸ், நாகை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் இளம்பழனியப்பன், இளம்பரிதி உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்குசென்று சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 60 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story