ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது கடைகளை அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்


ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது கடைகளை அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பனந்தாள்,

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் இஷாக் நகரை சேர்ந்தவர் ஜெகபர்அலி(வயது 40). இவர் சோழபுரம் மெயின் ரோட்டில் ஓட்டல்

நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது ஓட்டலில் உணவு இல்லை என ஜெகபர்அலி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதை தடுக்க வந்த அருகில் கோழி கடை நடத்தி வரும் ஹபிபுல்லா மற்றும் கடை உரிமையாளர் ஜெகபர்அலி ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஜெகபர்அலி, ஹபிபுல்லா ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

சோழபுரத்தில் வணிகர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து சோழபுரம் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சோழபுரம் கடைவீதியில் நேற்று திரண்டனர். அப்போது வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பொதுமக்களுடன் இணைந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் திருப்பனந்தாள் போலீசார் ஜெகபர்அலி, ஹபிபுல்லா ஆகியோரை கத்தியால் குத்தியதாக மணிகண்டன், சிவானந்தம், சூர்யா, விஷ்ணுவர்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story