களியக்காவிளை பஸ் நிலையத்தை நவீன படுத்த அதிகாரிகள் ஆய்வு


களியக்காவிளை பஸ் நிலையத்தை நவீன படுத்த அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:00 AM IST (Updated: 24 Jun 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை மற்றும் திங்கள்சந்தை பஸ் நிலையங்களை நவீனபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

களியக்காவிளை,

களியக்காவிளை மற்றும் திங்கள்சந்தை பஸ் நிலையங்களை நவீனபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அடிப்படையில் களியக்காவிளை பஸ் நிலையத்தை நவீனபடுத்த ரூ 3 கோடியும், திங்கள்சந்தை பஸ் நிலையத்துக்கு ரூ. 5.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை பேரூராட்சிகள் இயக்குனராக மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் களியக்காவிளை பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ் (பொறுப்பு), உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், இர்வின் ஜெயராஜ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இது குறித்து மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

களியக்காவிளை பஸ் நிலையத்தை நவீன படுத்தும் திட்டபணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story