ஆரணி வட்டத்தில் பள்ளி கட்டிடங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்


ஆரணி வட்டத்தில் பள்ளி கட்டிடங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:00 AM IST (Updated: 24 Jun 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி வட்டத்தில் ரூ.37½ லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்.

ஆரணி,

ஆரணி ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இரும்பேடு, வேலப்பாடி ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்களும், சித்தேரி, சங்கீதவாடி ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளியில் தலா ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் க.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சாந்திசேகர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு 4 பள்ளி கட்டிடங்களையும், கல்வெட்டுகளையும் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.ஜெயக்குமார், ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் இளவரசன், உதவி கலெக்டர் எஸ்.பானு, தாசில்தார் எஸ்.திருமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், மதுசூதனன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, ஒப்பந்ததாரர்கள் வேலு, பழனிவேலு, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story