வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
வீர, தீர செயல் புரிந்த குழந்தைகள் விருதுபெற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை,
கோவை கலெக்டர் ஹரிகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக முதல்-அமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்புரிந்த தமிழகத்தை சேர்ந்த பெண் விண்ணப்ப தாரர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெண்களுக்காகவே சிறந்த முறையில் சமூக சேவை புரிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் நிறுவனங்கள் சுதந்திர தின விழா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.2018-ம் கல்வி ஆண்டிற்கு (01.07.2017 முதல் 30.06.2018 வரை) சமூக கொடுமையை எதிர்த்து உயிரையும் துச்சமென மதித்து உடல்ரீதியான இன்னல்களையும் தாண்டி தன்னலமற்று துணிச்சலுடன் வீர, தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற 6 வயது முதல் 18 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த விருது பாராட்டு பத்திரம் மற்றும் காசோலை, கல்வி உதவி தொகை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேற்கண்ட விருதுகளுக்கு உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன் விவரக்குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story