கோவை காளப்பட்டியில் புறா பந்தயம் இன்று தொடங்குகிறது
கோவை காளப்பட்டியில் புறா பந்தயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
சரவணம்பட்டி,
கோவை காளப்பட்டி புறா பந்தய ஒருங்கிணைப்பாளர் மணி கூறியதாவது:-
காளப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் புறா பந்தயம் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புறா பந்தயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நடைபெறு கிறது.
இதையொட்டி இன்று நாட்டுப்புறாவுக்கான போட்டி, ஜூலை 1-ந் தேதி சாதா புறாவுக்கான போட்டி, ஜூலை 13-ந் தேதி நாட்டுப்புறாவுக்கான 3 நாட்கள் போட்டி, ஜூலை 27-ந் தேதி சாதா புறாவுக்கான 3 நாட்கள் போட்டி, ஆகஸ்டு 15-ந் தேதி ஜோடி புறாவுக்கான போட்டியும் என மொத்தம் 5 போட்டிகள் நடத்தப்படுகிறது.
காப்பாற்ற வேண்டும்
போட்டியை தி.மு.க. கோவை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாக் கவுண்டர் தொடங்கி வைக்கிறார். இதில் கலந்து கொள்ள ரூ.100 பதிவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவையில் 1000-க்கும் மேற்பட்டோர் புறா வளர்த்து வந்தனர். ஆனால் தற்போது புறா வளர்ப்பு குறைந்து கொண்டு வருகிறது. அன்றைய காலங்களில் அரசர்கள் புறாவை தூது அனுப்புவதற்கும், மன்னர்களின் உயிர்களை காப்பதற்கும், நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் போர் குறித்து தெரியப்படுத்துவதற்கும் புறாவை பயன்படுத்தினர்.
அப்படிப்பட்ட புறா இனம் தற்போது அழிந்து வருகிறது. எனவே புறா இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக் கத்தில் புறா பந்தய போட்டி நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறும் புறாக்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story