பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு, தோட்டங்களில் நாளை மறுநாள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்களுடைய வீடுகள் மற்றும் தோட்டங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சேலம்,
சேலம் பள்ளப்பட்டியில் உள்ள சினிமா நகரில் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல், த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், பா.ம.க. நிர்வாகி சதாசிவம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) குப்பனூர், கீரிக்காடு, ஜருகுமலை, ராமலிங்கபுரம் என இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய வீடுகள் மற்றும் தோட்டங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்.
மேலும் வருகிற 6-ந் தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே பசுமை வழிச்சாலை குறித்த அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story