எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:56 AM IST (Updated: 24 Jun 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

டப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

எடப்பாடி,

சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம், எடப்பாடி ஈஸ்வரன் கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், தலைமை கழக பேச்சாளர்கள் முன்னாள் எம்.பி. இளவரசன், பொன்.அருணாசலம், நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஒன்றிய செயலாளர்கள் எமரால்டு வெங்கடாஜலம், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கதிரேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கரட்டூர் மணி, மாதேஸ், நகர நிர்வாகிகள் நாராயணன், கேபிள் முருகன், எஸ்.பி.செங்கோடன், கந்தசாமி, உத்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் மாணவரணி செயலாளர் முஸ்தபா நன்றி கூறினார். 

Next Story