தினம் ஒரு தகவல் : நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா
காதலையும், சமத்துவம் நிறைந்த உலகத்தையும் தன்னுடைய கவிதைகளில் வார்த்த பெருங்கவிஞர், பாப்லோ நெரூதா.
சிலி நாட்டில் தோன்றிய நெரூதா எழுதியது ஸ்பானிய மொழியில். அப்பா ரெயில்வே ஊழியர். இளம் வயதிலேயே தந்தை இறந்தநிலையில், குடும்பத்தை காப்பான் பையன் என்று எதிர்பார்த்தனர், நெரூதாவின் குடும்பத்தினர். இவர் பிரெஞ்சு படித்துவிட்டு ஆசிரியர் ஆகலாம் என்று முயன்றார். ஆனால், அவர் வாழ்க்கை மாறி விட்டது. இவர் கவிதை எழுத வீட்டில் கடும் எதிர்ப்பு. செக் நாட்டை சேர்ந்த கவிஞரின் பெயரை புனைப்பெயராக்கி நெரூதா என்கிற பெயரில் குடும்பத்துக்கு தெரியாமல் கவிதை எழுதி வந்தார். அதுவே பின்னர் வாழ்வாகிப்போனது.
அவருடைய கவிதைகளில் காதலும், சோகமும், எளிய மக்களின் வாழ்க்கையை பாடும் வரிகளும் நிரம்பி வழிந்தன. எண்ணற்ற நாடுகளில் தூதுவராக பணியாற்ற அனுப்பியும், வறுமை அவரை துரத்தவே செய்தது. ஆனால் அந்த சோகங்களை தாண்டி அற்புதமான கவிதைகளை எழுதினார். இந்தோனேசியா நாட்டில் தனிமையில் வாடிக்கொண்டு இருந்த போது சந்தித்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, அவரையே திருமணம் செய்துகொண்டார். ‘கவிதை எழுதுபவனும், ரொட்டிக்காரனும் ஒன்றே. இருவரும் வேற்றுமைகள் பார்க்கக் கூடாது!’ என்று எழுதிய அவர் அப்படியே இருந்தார். உலகம் முழுவதும் தோலின் நிறம் ஒன்று தான் என்று எழுதினார்.
மக்களை ஒடுக்கிய அரசாங்கங்களை எதிர்த்து குரல் கொடுத்து அடிக்கடி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலை அவருக்கு உண்டானது. அவருடைய கவிதைகள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக பாட்டாளிகளை ஒன்று திரட்டின. ஒரு முறை விடேலா எனும் சர்வாதிகாரிக்கு எதிராக தயாரித்த உரையில், சித்ரவதை முகாமில் எத்தனை நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள் என்று பெயர் பட்டியலை வாசித்தார், மனிதர். சீக்கிரமே விடேலாவின் ஆட்சி கவிழ்ந்தது.
எத்தனையோ துன்பங்கள், தொடர்ந்து துரத்திய அரசாங்கங் கள் எல்லாமும் அவரை வாட்டிக்கொண்டு இருந்த போதும் மனித குலம் ஒன்று சேரும், போர்கள் நீங்கி உழைப்பாளிகள் உயர்வார்கள் என்று நம்பினார். நெரூதாவுக்கு 1971-ல் இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது. புற்றுநோயால் இவர் இறந்த போது, மக்கள் வந்து அஞ்சலி செலுத்தக்கூடாது என்று பினோசெட் எனும் சர்வாதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள், ஊரடங்கை உடைத்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கவிதை வெறுமனே கவர்வதற்கு மட்டும் இல்லை, கட்டுப்பாடுகளை உடைப்பதற்கும் தான் என்று பாடிய மக்கள் கவிஞர் பாப்லோ நெரூதாவின் கவிதைகள், பூமியுள்ள வரை நிலைக்கும்.

Related Tags :
Next Story