கோவில் குளத்தில் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பிணம் சாவில் மர்மம் உள்ளதாக தாய் புகார்


கோவில் குளத்தில் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பிணம் சாவில் மர்மம் உள்ளதாக தாய் புகார்
x
தினத்தந்தி 25 Jun 2018 4:45 AM IST (Updated: 24 Jun 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூரில் கோவில் குளத்தில் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பிணமாக மிதந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருது£ர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சத்யராஜ்(31). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றர். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் குளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து குணசேகரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது குளத்தில் தனது மகன் சத்தியராஜ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.


இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருது£ர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவில் குளத்தில் இருந்து சத்யராஜ் உடலை மீட்டு அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யராஜ் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தாய் ஜெயலட்சுமி திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் கோவில் குளத்தில் பிணமாக மிதந்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story