ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,500 கனஅடியாக குறைந்தது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 17,500 கனஅடியாக குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 17,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது. ஆனால் நேற்று 2-வது நாளாக பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீடித்தது. இதனிடையே நேற்று விடுமுறை நாள் என்பதால் கர்நாடக மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.
அவர்கள், அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பாக குளிக்குமாறும், காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

Related Tags :
Next Story