எல்.எஸ்.எஸ்., சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களை இயக்க அனுமதி இல்லை, போக்குவரத்து துறை தகவல்


எல்.எஸ்.எஸ்., சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களை இயக்க அனுமதி இல்லை, போக்குவரத்து துறை தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2018 3:00 AM IST (Updated: 25 Jun 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழகம் எல்.எஸ்.எஸ்., சிட்டி எக்ஸ்பிரஸ், புறநகர் எக்ஸ்பிரஸ் பஸ்களை இயக்க அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என வட்டார போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர்,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளதாவது:-

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கழக நிர்வாகம் விருதுநகர் மாவட்டத்தில் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரியால் போக்குவரத்துக்கழகம் 218 டவுன் பஸ்களையும் 45 புறநகர் பஸ்களையும் இயக்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனுமதியின்றி போக்குவரத்துக்கழகம் எந்த பஸ்களையும் இயக்கவில்லை.

எல்.எஸ்.எஸ்., சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் எக்ஸ்பிரஸ் பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழகம் எல்.எஸ்.எஸ்., சிட்டி எக்ஸ்பிரஸ், புறநகர் எக்ஸ்பிரஸ் என கூடுதல் கட்டணத்துடன் பஸ்களை இயக்கி வருகின்றது. எனவே போக்குவரத்துத்துறையின் அனுமதியின்றி இந்த பஸ்களை இயக்கும் போக்குவரத்துக்கழகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

Next Story