திங்களூர் அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு சாவு
திங்களூர் அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள கரட்டூர் கும்மன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40). இவர் சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கயல்விழி (36). இவர்களுக்கு பிரசாந்த் (13), நிஷாந்த் (4) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மகேந்திரன் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கோபியில் இருந்து சிறுவலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.
திங்களூர் அருகே உள்ள கிரே நகர் ரங்கன்காடு பகுதியில் வந்தபோது, சாலையோரத்தில் உள்ள ஒரு மின் மோட்டார் அறையின் சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மகேந்திரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

Related Tags :
Next Story