தொழிலாளி வெட்டி கொல்லப்பட்ட வழக்கு: மேலும் ஒரு வாலிபர் கைது
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் தொழிலாளி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த மருதை மகன் குமரேசன் (வயது 28). தொழிலாளியான இவரை, கடந்த 18–ந்தேதி ஆர்.வி.நகரில் வைத்து மிளகாய் பொடியை முகத்தில் தூவி ஓட, ஓட விரட்டி ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் (24), அவருடைய தம்பி அசோக்குமார் (22) மற்றும் சந்தோஷ்குமார் (24), முகமது சேக் அப்துல்லா (24) ஆகியோரை திண்டுக்கல் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும், 4 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதேபோல முக்கிய குற்றவாளியான செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் (24) மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இதற்கிடையே தலைமறைவாக இருந்த சாகுல் அமீது (22), லத்தீப் (23) ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று பேகம்பூரில் பதுங்கி இருந்த சாகுல் அமீதுவை போலீசார் கைது செய்தனர்.