போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சந்துருஜியின் முக்கிய கூட்டாளி உள்பட 3 பேர் கைது
போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சந்துருஜியின் முக்கிய கூட்டாளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி,
ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மரை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி அதைப்போல் போலியாக ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கி அவர்களது வங்கிகணக்கில் இருந்து பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இதைத்தொடர்ந்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த சந்துருஜியை வலை வீசி தேடிவருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான பெரும்பாலானவர்கள் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள நிலையில் சந்துருஜி மட்டும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனக்கும் இந்த மோசடி சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார்.
அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில் சந்துருஜிக்கும் திருப்பூர் மாவட்டம் அவினாசி திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அமல்ராஜ் மகன் பீட்டர் (வயது 38) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்தான் சந்துருஜியின் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். மேலும் கோவை மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் பட்டதாரியான தினேஷ் (33) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் அழகுநிலையம் நடத்தி வரும் இவரும் பீட்டரும் சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி சட்ட விரோதமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் ரகுமான் (வயது 34) என்பவருக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் வாங்கித்தரும் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். தினேஷ் மீது ஏ.டி.எம். மோசடி தொடர்பாக கோவையில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான பீட்டர் என்பவரிடம் இருந்து 2 லட்சம் ரொக்கம், லேப்டாப் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் 5-ம், தினேஷிடமிருந்து சொகுசு கார் ஒன்றும், இர்பான் ரகுமானிடமிருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றும், 4 லேப்டாப் கம்ப்யூட்டர்கள், வங்கி காசோலை புத்தகங்கள் 3, வங்கி கணக்கு புத்தகம் 2 ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.
குற்றவாளிகளை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் ஆகியோர் பாராட்டினார்கள்.

Related Tags :
Next Story