‘தண்ணீர் பந்தல்’ நிலம் மீட்கப்பட்டு அரசு கலைக்கல்லூரி கட்டப்படுமா?
திருச்சி அருகே தண்ணீர் பந்தலுக்கான நிலத்தை மீட்டு அரசு கலைக்கல்லூரி கட்ட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி,
கோவில்களுக்கு பாதயாத்திரையாக செல்பவர்களின் நலன் கருதி நம் முன்னோர்கள் முக்கிய சாலைகளில் அன்னதான சத்திரம், தங்கும் சத்திரம் மற்றும் தண்ணீர் பந்தல்களை அமைத்து கொடுத்து உள்ளனர். இப்படி அமைக்கப்பட்ட சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள் பல இடங்களில் அவை இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய்விட்டன. ஒரு சில இடங்களில் இருப்பவையோ ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இல்லையென்றால் முறையான ஆவணங்கள் இன்றி கணக்கில் வராமல் போய்விட்டன.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தண்ணீர் பந்தல் தர்மஸ்தாபனம் என்ற பெயரில் 19.85 ஏக்கர் நிலம் இருந்து வருகிறது. திருச்சி- தோகைமலை மெயின்ரோட்டில் பள்ளக்காடு என்ற இடத்தில் உள்ள இந்த இடம் ஆண்டாண்டு காலமாக பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இடமாக இருந்து வந்துள்ளது. மாசி மாதம் முதல் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி வரையிலான மாதங்களில் தோகைமலை வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவில், பழனி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், வயலூர் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு நடைப்பயணமாக செல்லும் பக்தர்களுக்கு இந்த இடத்தில் வைத்து தான் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. பல மைல் தூரம் நடந்து வரும் பக்தர்கள், வெயில் களைப்பு நீங்க சற்று இளைப்பாறி செல்லும் இடமாகவும் பயன்பட்டு வந்திருக்கிறது.
1,910-ம் ஆண்டில் உள்ள ஆவணத்தில் மொத்த நிலமும் தண்ணீர் பந்தல் தர்மஸ்தாபனத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் ஜில்லா போர்டு என்ற நிர்வாகத்திடம் இந்த நிலம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. ஜில்லா போர்டு நிர்வாகத்தினர் இதனை குத்தகைக்கு விட்டு இருக்கிறார்கள். குத்தகைதாரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரியை முறையாக செலுத்தாமல் விடுபட்டு போய் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் இந்த நிலம் காலப்போக்கில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பின்னர் குத்தகைதாரர்களுக்கும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் இடையே கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் குத்தகைதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர அந்த நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்க முயற்சி நடந்து வருகிறது. பொது நோக்கத்திற்காக வழங்கப்பட்ட இடத்தை தனியார்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு எதிராக அப்பகுதி மக்கள், பொது நல அமைப்பினர் மற்றும் விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சிசார்பற்றது) திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை ‘பக்தர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற தர்ம நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் இன்று அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் அரசு சார்பில் அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், அந்த இடத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்க முயற்சி நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஒட்டு மொத்த நிலத்தையும் மீட்டு அந்த இடத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகளை திரட்டி தண்ணீர் பந்தல் நிலத்தில் நிரந்தரமாக குடியேறும் போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறினார்.

Related Tags :
Next Story