பிளாஸ்டிக் பைகள் தடையால் இறைச்சி, மீன் வியாபாரிகள் கடும் பாதிப்பு
பிளாஸ்டிக் பைகள் தடையால் இறைச்சி, மீன் வியாபாரிகள் கடுமை யாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
மும்பை,
பிளாஸ்டிக் பைகள் தடையால் இறைச்சி, மீன் வியாபாரிகள் கடுமை யாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் பைகள்
மராட்டியத்தில் நேற்று முன்தினம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையால் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படும் என்றாலும் பல்வேறு தரப்பினர் தற்காலிக இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் தடையால் அதிகம் பாதிக்கப்பட் டவர்கள் கோழி, ஆடு இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் எனலாம்.
அவர்கள் இறைச்சி, மீன் விற்பனைக்கு முழுக்க, முழுக்க பிளாஸ்டிக் பைகளை மட்டுமே நம்பி உள்ளனர். இதேபோல இறைச்சி, மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கும் பிளாஸ்டிக் பைகள் இன்றியமையாததாக உள்ளன.
வியாபாரிகள் புலம்பல்
நேற்று மும்பையின் பல இடங்களில் வியாபாரிகள் காகிதங்களில் இறைச்சி, மீனை பொதிந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தனர். ஆனால் அவை விரைவில் கெட்டு போகும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் கூறினர். மேலும் காகிதங்களில் பொதிந்து வைத்து இறைச்சியை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. இதுகுறித்து அந்தேரி பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருபவர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பைகளில் இறைச்சியை கொடுப்பது என்பது மிகவும் சுலபமான ஒன்றாகும். தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எப்படி வியாபாரம் செய்வது என தெரியாமல் உள்ளோம். அரசு பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக எதையாவது தந்துவிட்டு தடையை அமல்படுத்தி இருக்கலாம். வாடிக்கையாளர்களை இறைச்சி வாங்க வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு வர அறிவுறுத்தி உள்ளோம். எனினும் பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் இறைச்சி விற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டலில் விற்பனை குறைந்தது
இதேபோல பிளாஸ்டிக் தடையால் மீன்வியாபாரி களும் பாதிக் கப்பட்டுள்ளனர். தெர்மாக் கோலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தகரப் பெட்டியில் தான் இனிமேல் மீன்களை பதப்படுத்தி வைக்க முடியும்.
தற்போது மும்பையில் சில இடங்களில் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. வியாபாரிகள் காகிதத்திற்குள் பிளாஸ்டிக் பேப்பரை வைத்து இறைச்சியை பார்சல் செய்து வாடிக்கை யாளர்களுக்கு கொடுக்கின் றனர். பிளாஸ்டிக் தடையால் இறைச்சி, மீன் வியாபாரிகள் தவிர ஓட்டல் உரிமையாளர் களும் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். உணவு பொருட்களை பார்சல் செய்ய மாற்று வசதி இல்லாததால் ஹோம் டெலிவரி செய்ய முடியாமல் ஓட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் விற்பனை அதிகளவு பாதிக்கப் பட்டுள்ளதாக அந்தேரி பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ஹேமந்த் கூறினார்.
Related Tags :
Next Story