புனேயில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரர்களை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்
புனேயில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக் காரர்களை அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் போல் சென்று பிடித்தனர்.
புனே,
புனேயில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக் காரர்களை அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் போல் சென்று பிடித் தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வாடிக்கையாளர் போல்...
மராட்டியத்தில் நேற்று முன்தினம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு அரசு 3 மாத காலம் அவகாசம் ெகாடுத்து இருந்த போதிலும் கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் பொரு ட்கள் வாடிக்கையாளர் களுக்கு கொடுக்கப் பட்டு வந்தன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் வாடிக்கையா ளர்கள் போல் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அபராதம் வசூல்
அப்போது, அந்த பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களை பிடித்து அதிகாரிகள் அபராதம் விதித்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல தானே மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரத்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.95 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story