அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதி
பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் இயங்கும் திருவொற்றியூர் அரசு கல்லூரியில், அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ– மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவொற்றியூர்,
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2012–ம் ஆண்டு திருவொற்றியூரில் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்லூரிக்கு என்று தனிக்கட்டிடம் இல்லாததால் தற்காலிகமாக திருவொற்றியூர் தேரடியில் உள்ள பூந்தோட்ட ஆரம்பப்பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மணலி புதுநகர், விச்சூர், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது இந்த கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. பள்ளி வளாகத்தில் முதல்வர் அறை, பேராசிரியர்கள் அறை, வகுப்பறைகள் என 10 அறைகள் மட்டுமே உள்ளன. தற்போது பி.காம், பி.காம். சி.ஏ., பி.சி.ஏ., பி.ஏ.தமிழ்., பி.ஏ.ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.
போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இந்த கல்லூரிக்கு ஆய்வக வசதி மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட 2013–ம் ஆண்டு ஆல் இந்திய ரேடியோ நகரில் உள்ள டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான 4.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.7.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கல்லூரி கட்ட நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் அங்கு கட்டிடம் கட்டவில்லை.
அதேபோன்று கடந்த 2016–ம் ஆண்டு தற்போது தற்காலிகமாக கல்லூரி இயங்கி வரும் இடத்திலேயே நிரந்தர கட்டிடம் கட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. அந்த இடத்தை மாநகராட்சியிடம் இருந்து கையகப்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கலால் அங்கும் கட்டிடம் கட்டப்படவில்லை.
இந்த நிலையில் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் கடந்த 40 வருடங்களாக நடைபயிற்சி செல்வோர், கைப்பந்து, பேட்மிண்டன் விளையாடுவோர் என பலதரப்பினரும் அங்கு கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட திருவொற்றியூர் பகுதிக்கு உட்பட்ட காலடிப்பேட்டை கன்னியா குருகுலம் மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட பல பகுதிகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனால் நடைமுறை சிக்கல்களினால் எந்த இடமும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பாழடைந்த பழைய பள்ளி கட்டிடத்திலேயே கல்லூரி தொடர்ந்து 6–வது ஆண்டாக இயங்கி வருகின்றது.
பள்ளி கட்டிடங்கள் முழுவதும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலும், மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு வரும் மாணவ–மாணவிகள் பயத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் கழிப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் கல்லூரி மாணவ–மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கல்லூரியில் 3–ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கூறியதாவது:–
நாங்கள் படித்து வரும் கல்லூரியில், கல்லூரிக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை. பள்ளி வகுப்பறையில் எங்களால் அமர்ந்து படிக்கவே முடியவில்லை. கல்லூரி கட்ட திருவொற்றியூரில் எந்த இடமும் கிடைக்கவில்லை என்பதால் கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றுவதாக செவி வழி செய்தி வந்துள்ளது. இதனால் நாங்கள் கலக்கம் அடைந்து உள்ளோம். எங்களுக்கு திருவொற்றியூர் கல்லூரிக்கு வந்து செல்ல பஸ் போக்குவரத்து, ரெயில் வசதி உள்ளது. எனவே பூந்தோட்ட பள்ளியின் ஒரு பகுதியில் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதையும் விரைவில் கட்டித்தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story