ரூ.32 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் : சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கினார்


ரூ.32 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் : சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jun 2018 1:07 AM IST (Updated: 26 Jun 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

ரூ.32 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 152 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் வழங்கினார்.

காஞ்சீபுரம்,

உலக சுற்றுச்சூழல் தினவிழா மற்றும் சட்டக்கல்வி அறிவு தொடர்பான சிறப்பு முகாம் காஞ்சீபுரத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, நீதிபதிகள் வசந்தலீலா, ஜி.கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய செயல்குழு தலைவர் ஹூலுவாடி ஜி.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் ரூ.32 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 152 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் வழங்கினார்.

Next Story