காவிரி மேலாண்மை ஆணையம்-ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக பிரதிநிதிகள் 2 பேர் நியமனம் - நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார்
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடகம் சார்பில் 2 பிரநிதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே. சிவக்குமார் கூறினார். மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
பெங்களூரு,
பெங்களூரு விதான சவுதாவில் காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை பிறப்பித்தது. இந்த குழுவுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் தங்களின் உறுப்பினர்களை நியமித்தது. ஆனால் கர்நாடகம் மட்டும் உறுப்பினர்களின் பெயர்களை அனுப்பாமல் இருந்து வந்தது. சில நிபந்தனைகளுடன் உறுப்பினர்களின் பெயர்களை அனுப்புவோம் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறி இருந்தார்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், தலைமை செயலாளர் ரத்னபிரபா, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ்சிங், அட்வகேட் ஜெனரல் உள்பட சட்ட நிபுணர்கள், நீர்வளத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 3.45 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
“காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரியை முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 18-ந் தேதி டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடக நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவரமாக எடுத்துக் கூறி இதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது பற்றி அரசிதழில் வெளியிட்டது.
மேலும் மத்திய அரசு கடந்த 22-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து உத்தரவிட்டது. கர்நாடகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் 6 உறுப்பினர்கள் இருந்தாலே ‘கோரம்‘ கிடைத்துவிடுகிறது. கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்க முடியும். ஆனால் அந்த ஆணையத்தில் கர்நாடகம் இல்லாமல் 7 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த விஷயத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று(அதாவது நேற்று) நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி, நான், உள்பட முக்கிய உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், மற்றும் நீர்வளத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள விஷயம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் கர்நாடக எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் இதுபற்றி கர்நாடக எம்.பி.க்கள் பிரச்சினையை எழுப்பி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முடிவு எடுக்கப்படும். இந்த அனைத்துக்கட்சி கூட்டம் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் நடைபெறும்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வருகிற 2-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடக பிரதிநிதிகள் இல்லாவிட்டால் நமக்கு இன்னும் அநீதி ஏற்படக்கூடும் என்று அரசு கருதுகிறது. இதன் காரணமாக கர்நாடகத்திற்கு மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று கருதி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ்சிங், காவிரி நீர்ப்பாசன கழக நிர்வாக இயக்குனர் எச்.எல்.பிரசன்னா ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு கடந்த 23-ந் தேதி அனுப்பி வைத்தோம்.
கர்நாடகம் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்புகளை பதிவு செய்து 2 உறுப்பினர்களை நியமித்து இருக்கிறோம். அத்துடன் கர்நாடகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு ஒரு விரிவான கடிதமும் எழுதப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கர்நாடக நலனுக்கு எதிராக இருக்கும் சிலவற்றை நீக்கும்படி கர்நாடகம் தொடர்ந்து போராடும். சட்ட நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறி இருக்கிறார்கள். அதன்படி சட்ட ரீதியாக போராடலாமா? என்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
காவிரி பிரச்சினை இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் கர்நாடகத்திற்கு நியாயம் பெற நாங்கள் தீவிரமாக போராடுவோம். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் மாநிலத்தின் உண்மை நிலையை எடுத்துக் கூறுவார்கள். இந்த விவகாரத்தில் சில செயல் திட்டங்களை வைத்துள்ளோம். அதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. கர்நாடகத்தின் நலனை நாங்கள் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இந்த பிரச்சினையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. கர்நாடகத்தின் நலனை காக்க எதிர்க்கட்சியான பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு உதவ வேண்டும்.” இவ்வாறு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக் குமார் கூறினார்.

Related Tags :
Next Story