மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு + "||" + In the office of the collector The delivery of the baby in the cradle

கலெக்டர் அலுவலகத்தில் தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கலெக்டர் அலுவலகத்தில் தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் 2–வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு தொட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த தொட்டிலில் கடந்த மே மாதம் 14–ந் தேதி பிறந்து 20 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை 1 கிலோ 400 கிராம் எடை இருந்தது. அந்த குழந்தையை, குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வழக்கமாக இருக்கும் எடையை விட அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் அதை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் அனுமதித்து அங்கு இருக்கும் இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அந்த குழந்தையின் உடல் நன்கு தேறியது. தற்போது அந்த குழந்தை 2 கிலோ எடை உள்ளது. மேலும் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. எனவே அதை கோவை கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் காப்பகத்தில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி நேற்று அந்த குழந்தைக்கு வெங்கடேஷ் என்று பெயர் சூட்டப்பட்டு, காப்பக நிர்வாகிகளிடம் கோவை அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் ஒப்படைத்தார்.

இது குறித்து இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் கூறும்போது, ‘இந்த குழந்தையை தொட்டிலில் போட்டவர்கள் அது தங்களின் குழந்தைதான் என்று கேட்க வந்தால், அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது குழந்தை ஒப்படைக்கப்பட்ட காப்பகத்திற்கோ நேரில் சென்று தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து குழந்தையை பெற்றுச்செல்லலாம். இல்லையென்றால் அந்த குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்படும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம்; 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பெண்களுக்கு மானிய உதவியுடன் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்திற்கு வருகிற 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
2. அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வுக்கூட்டத்தில் கூறினார்.
3. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகள் 166 பேருக்கு உதவி உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுததிறன் கொண்ட குழந்தைகள் 116 பேருக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.
4. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
5. கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை