கல்குவாரி, கிணறுகளுக்கு வெடி வைக்கும் போது அரசால் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்
கல்குவாரிகள் மற்றும் வெடிமருந்து குடோன்களின் நிறுவன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை, ஜூன்.26-
கல்குவாரி, கிணறுகளுக்கு வெடி வைக்கும் போது அரசால் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி கூறினார்.
திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் மற்றும் வெடிமருந்து குடோன்களின் நிறுவன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கல் குவாரிகள் மற்றும் கிணறுகளில் வெடி வைக்கும் போது பொதுமக்கள் யாரும் வெடி வைக்கும் பகுதிக்கு அருகில் வரக்கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்ய வேண்டும். வெடி வைக்கும் இடத்திற்கு அருகாமையில் எவரும் செல்லாதவாறு சிவப்பு நிற எச்சரிக்கை கொடிகள் கட்டியும், எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும் அரசால் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வெடிமருந்துகள் வாங்க வரும் நபர்களின் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளின் நகல் கட்டாயம் வாங்கிக்கொண்ட பிறகே வெடிமருந்துகள் வழங்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் வகுத்துள்ள விதிமுறைகளின் படி தீ தடுப்பான்கள், மணல், தண்ணீர் போன்ற பாதுகாப்பு பொருட்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கல்குவாரிகள் மற்றும் வெடிமருந்து குடோன்களின் நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story