சேலம் அருகே 8 வழி பசுமை சாலைக்கு முன்னாள் அமைச்சர்கள் நிலங்களில் அளவீடு
சேலம் அருகே 8 வழி பசுமை சாலை அமைக்க முன்னாள் அமைச்சர்களின் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் நிலத்தில் அளவீடு செய்யப்பட்ட இடத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி அவர்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்யும் பணி கடந்த 18-ந் தேதி தொடங்கியது. பசுமை வழிச்சாலையால் விவசாய நிலங்கள், வீடுகள் பறிபோவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டணம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், ராமலிங்கபுரம், நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல்லை நட்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறவில்லை.
நேற்று 7-வது நாளாக தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியை தொடங்கினர். சேலம் அருகே பாரப்பட்டியில் இந்த பணி தொடங்கி பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரையிலான 2.86 கிலோ மீட்டர் தூரத்திற்கான நிலம் அளவீடு பணி நடைபெற்றது.
இந்த பகுதிகளில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மகன் வீரபாண்டி ராஜா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் அணியின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் நிலங்கள் உள்ளதால் போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பூலாவரி புஞ்சைக்காடு பகுதியில் அப்புசாமி நாயக்கர் தோட்டத்தில் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர். இதற்கு அங்கிருந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நிலம் அளவீடு செய்யும் பணியை யாரும் தடுக்கவில்லை. ஆகையால் அதிகாரிகள் தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு எல்லைக்கல்லை நட்டு வைத்து சென்றனர்.
அதேபகுதியில் தனம் என்ற மூதாட்டியின் வீடு, அவருடைய தென்னை மர தோட்டம் ஆகியன பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது அவர், ‘கடன் வாங்கி கட்டிய வீடு பறிபோகிறதே, நாங்கள் இனி நடுரோட்டிற்கு தான் செல்ல வேண்டும்’ என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
சக்திவேல் என்ற விவசாயி வீட்டின் பாதி பகுதி மற்றும் தென்னை தோட்டத்தில் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்தனர். இதை பார்த்ததும் சக்திவேலின் மனைவி செல்வி, அவருடைய உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். மார்பில் அடித்தபடியே அழுதனர். பேரனுக்காக கட்டப்பட்ட இந்த வீட்டை இடிப்பதற்கு முன், எங்களை கொன்று விட்டு நிலத்தை எடுத்து கொள்ளுங்கள், என்று கூறிய படி செல்வி தரைவில் படுத்து உருண்டு புரண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. திடீரென மயங்கிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேற்றினர். சக்திவேல் தென்னை தோட்டத்தில் தேங்காய்கள் பறிக்கப்பட்டு ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்து எல்லைக்கல்லை நட்டனர்.
இதை பார்த்த விவசாயிகள் ஆத்திரமடைந்து தோட்டம் மற்றும் வீட்டின் பின்பகுதியில் நடப்பட்ட எல்லைக்கலை பிடுங்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார், கல்லை பிடுங்கினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்தனர். இதற்கு சக்திவேல், என் வீடே பறிபோகிறது, நீங்கள் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள், என்று கூறி கண்ணீர் விட்டார்.
இதேபோல் மோகனசுந்தரம் என்ற விவசாயியின் புதிய வீடு, நிலம் ஆகியவை பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக அதிகாரிகள் வீடு, நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த மோகனசுந்தரம், அவருடைய மனைவியும் ஆசிரியையுமான மணிமேகலை உள்பட உறவினர்கள் சிலர் தோட்டத்தில் நின்று கதறி அழுதனர்.
பாரப்பட்டியில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமியின் 4 ஏக்கர் நிலமும், பூலாவரி அக்ரஹாரம் பகுதியில் உள்ள அவருடைய சகோதரிகள் சாந்தாவின் 5 ஏக்கர் நிலமும், டாக்டர் மைனாவதியின் 2 ஏக்கர் நிலமும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் சூளமேடு பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மகன் வீரபாண்டி ராஜா ஆகியோரின் 3 ஏக்கர் 30 சென்ட் நிலமும், புஞ்சைக்காட்டில் உள்ள டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த எஸ்.கே.செல்வத்தின் 4½ ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட அளவீடு செய்யப்பட்டன.
நிலம் அளவீடு செய்யும் பணி மாலையில் உத்தமசோழபுரம் பஞ்சாயத்தில் உள்ள சூளமேடு பஸ் நிறுத்தம் அருகே முடிவடைந்தது. நேற்று அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் நிலக்கடலை, சோளம், கரும்பு, வாழை, தென்னை, பனை, மாமரம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன. அந்த பகுதிகளில் சிலருடைய வீடுகளும் இந்த திட்டத்தால் இடிக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் இன்னும் அளவீடு பணி நடைபெறாமல் உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, ‘பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளை வற்புறுத்தி நிலங்களை பெறக்கூடாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் போலீசாரை வைத்து மிரட்டி நிலங்களை பறித்து வருகின்றனர். சென்னைக்கு செல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் எங்களுடைய வீடுகள், நிலங்களை அழித்து பசுமை சாலை அமைக்கிறார்கள். எங்கள் எதிர்ப்பை மீறி இந்த சாலையை அமைத்தால் அதை பார்க்க நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம். தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்‘ என்றனர்.

Related Tags :
Next Story