தினக்கூலி ஊழியர்களாக மாற்றக்கோரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்


தினக்கூலி ஊழியர்களாக மாற்றக்கோரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:45 AM IST (Updated: 26 Jun 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தினக்கூலி ஊழியர்களாக மாற்றக்கோரி பொதுப் பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசின் பொதுப் பணித்துறையில் 1,311 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் 16 நாட்கள் வேலையும், நாளொன்றுக்கு ரூ.200 சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.

அவர்கள் தங்களது வேலை நாட்களை 30 ஆக உயர்த்தக்கோரியும், நாளொன்றுக்கு ரூ.398 சம்பளம் வழங்கவேண்டும், என்றும் முழுநேர தினக்கூலி ஊழியர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறுகட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வவுச்சர் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இதுதொடர்பான கோப்பினை அரசுக்கு உடனடியாக அனுப்புவதாகவும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் நேற்று மாலை தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

Next Story