சுங்குவார்சத்திரம் அருகே போலீஸ்காரர் கல்லால் அடித்துக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தது நேற்று தெரியவந்தது.
வாலாஜாபாத்,
சுங்குவார்சத்திரம் அருகே போலீஸ்காரர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வேலூர் மாவட்டம் பொய்கைநல்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 48) முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
மோகன்ராஜ் பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு தன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றார். இந்நிலையில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தது நேற்று தெரியவந்தது. இந்த பள்ளி போலீஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே உள்ளது.
கொலை சம்பவம் குறித்து அறிந்து டி.ஐ.ஜி தேன்மொழி, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோகன்ராஜ் தலையில் கல்லால் அடித்ததால் பலத்த காயம் இருந்தது. மேலும் மது பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்திய காயமும் காணப்பட்டது.
பின்னர் மோகன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? என கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகன்ராஜூக்கு அன்புரோஜா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் மோகன்ராஜ் சில நாட்களுக்கு முன்பு தான் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story