கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை அக்காள் மகன் கைது
ராசிபுரம் அருகே கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அக்காள் மகனை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியம், பி.மேட்டூர் அருகேயுள்ள பல்லவநாயக்கன்பட்டி உப்பிலியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அங்காயி. இவர்களது மகன் ஆனந்தன் (வயது 35). கட்டிட மேஸ்திரி.
தந்தை இல்லாததால் ஆனந்தன் அவரது தாயார் அங்காயி உடன் வசித்து வந்தார். ஆனந்தனுக்கு திருமணமாகிவிட்டது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி விமலாதேவியும்(30), மகள் கோகிலாவும் (10) அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அவர்கள் கடந்த 6 வருடங்களாக சின்னசேலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
குத்திக்கொலை
ஆனந்தனின் உடன் பிறந்த அக்காள் செல்வி (37) வீடும், ஆனந்தன் வீடும் அருகருகே உள்ளது. தற்போது செல்வியும், அவரது கணவர் சித்தேஸ்வரனும் வீரபாண்டியில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் 18 வயது சிறுவன் அடிக்கடி பல்லவநாய்க்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு வருவார்.
இந்த நிலையில் நேற்று 18 வயது சிறுவனும், அவரது தாய் மாமன் ஆனந்தனும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது போதை அதிகமானதால் ஆனந்தனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் உள்ள கட்டிலில் படுக்க வைத்துள்ளனர். ஆனந்தனின் தாயார் அங்காயி பூ எடுப்பதற்காக வெளியே சென்றுவிட்டார். இந்த நிலையில் கட்டிலில் போதை மயக்கத்தில் படுத்து கிடந்த ஆனந்தனை தோசை கரண்டியால் 18 வயது சிறுவன் பலமுறை குத்தினார். இதில் 7 இடங்களில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அக்காள் மகன் கைது
பின்னர் அந்த சிறுவன் தனது பாட்டியிடம் உன்னை திட்டியதால் தான் மாமன் ஆனந்தனை குத்தி கொலை செய்ததாக கூறி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மல்லூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story