இயற்கை விதிகளுக்கு முரணாக உள்ள உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மாற்றப்பட வேண்டும்


இயற்கை விதிகளுக்கு முரணாக உள்ள உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மாற்றப்பட வேண்டும்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை விதிகளுக்கு முரணாக உள்ள உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மாற்றப்பட வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று நடந்தது. பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆண்டு வரவு–செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த கூட்டத்தில் பேரமைப்பின் மாநில–மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* வணிகர்களுக்கு ஓய்வூதியம், இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் மொத்த வரியில் 2 சதவீத வருவாய் ஒதுக்கவேண்டும்.

* நச்சு கழிவுகளை வெளியேற்றும் ரசாயன தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

* உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் வணிகர்களை பாதிக்கக்கூடிய, இயற்கை விதிகளுக்கு முரணாக உள்ள விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

* நாடு முழுவதும் உள்ள ஆறுகளை ஒன்றிணைத்து, மாநிலங்களுக்கு இடையே சுமூகமான நிலையை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* பழனியில், வ.உ.சி. பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் இரவு நேரங்களிலும் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும்.

* பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர பழனி கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story