சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:00 AM IST (Updated: 27 Jun 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரம்,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் யூத் ரெட்கிராஸ் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட சேர்மன் ஹாரூன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

இதில் கலால் துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், சுவார்ட்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் பால்மாறன் மற்றும் அரசு மகளிர் கல்லூரி, செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி, செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி, தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், ஸ்ரீமதி மற்றும் ரெட்கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் மலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம், உறுப்பினர்கள் கருப்பசாமி, சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story