கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 2-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நல்வாழ்வு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தலைவர் தூத்துக்குடி நாச்சியப்பன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அரியகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் 600 பேர் கடந்த 15 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது கோர்ட்டு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

எனவே அந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளாததால் வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி உள்பட டாஸ்மாக் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story