தோகைமலை ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் பொதுமக்கள் வராததால் சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து
தோகைமலை ஒன்றியத்தில் உள்ள பொருந்தலூர், ஆலத்தூர், சின்னப்பாளையம் ஊராட்சிகளில் பொதுமக்கள் வராததால் சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தோகைமலை,
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தென்மேற்கு பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த தோகைமலை ஒன்றிய தனி அலுவலர் ராணிக்கு, கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அந்தந்த ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவு கடிதங்களை தனி அலுவலர் அனுப்பினார்.
இதில் கல்லடை, கழுகூர், தோகைமலை, வடசேரி, பாதிரிபட்டி, பில்லூர், புத்தூர், கள்ளை, கூடலூர், ஆர்ச்சம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன. கூட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் பொருந்தலூர், ஆலத்தூர், சின்னையம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்கள் வராததால் சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பொருந்தலூர் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டம் நடப்பது குறித்து ஊராட்சியின் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கியும், தண்டோரா போட்டும், ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்படும். ஆனால் சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. தகவல் தெரி யாததால் பொதுமக்கள் வரவில்லை, என்று கூறினர்.
இந்நிலையில் சின்னையம்பாளையம் ஊராட்சியில் உள்ள காக்காயம்பட்டி காலனி பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்து மனு அளிக்க சின்னையம்பாளையத்திற்கு வந்தனர். அங்கு கிராம சபை கூட்டம் நடக்காததால் தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து மனு அளித்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டபோது, கிராம சபை கூட்டம் குறித்து முதல் நாள் மாலை அல்லது இரவு நேரத்தில் அதிகாரிகள் தகவல் அளிக்கிறார்கள். இதனால் முறையாக அறிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வருகிற பொதுமக்களை வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது, என்றனர். தனி அலுவலர் ராணி கூறுகையில், அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும், கூட்டம் நடைபெறாதது குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் தகவல் பெற்று தெரிவிப்பதாக, கூறினார்.

Related Tags :
Next Story