நாமக்கல்லில் போதைபொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் நேற்று சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நேற்று போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்து, சிறிது தூரம் நடந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார். இதில் கல்லூரி மாணவர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது மணிக்கூண்டு, பஸ் நிலையம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக மீண்டும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முன்னதாக சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) செந்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், தாசில்தார் பச்சமுத்து, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். நாமக்கல் திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.

Related Tags :
Next Story