தஞ்சையில் ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு போலீஸ் விசாரணை


தஞ்சையில் ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2018 3:45 AM IST (Updated: 27 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் ரூ.4 லட்சம் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சோழன்நகர் 5-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் சீனிவாசன்(வயது66). இவர் ஆடுதுறையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிதி காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்து பொருட்கள் எல்லாம் அறையில் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 19 பவுன் நகையை காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொம்பன்குடிசை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

Next Story