2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை
மதுரவாயல் அருகே 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.
பூந்தமல்லி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் அபீப்ரகுமான் (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்தபோது அவருடன் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த அனிஷாபாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முகமது நயீப்(6), ரயான்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அனிஷாபாத்திமா கணவரை பிரிந்து இலங்கையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இரண்டு மகன்களையும் அபீப்ரகுமான் வளர்த்து வந்தார். மனைவி பிரிந்து சென்றபிறகு அபீப்ரகுமான் கடந்த ஒரு வருடமாக மதுரவாயலை அடுத்த சேக்மான்யம், காமதேனு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக அபீப்ரகுமானின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்து வந்தது. மேலும் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
இதனால் நேற்று காலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் வராண்டாவில் அபீப்ரகுமான் மற்றும் அவரது மூத்த மகன் முகமது நயீப்பும் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். படுக்கை அறை கட்டிலில் இளைய மகன் ரயானும் பிணமாக கிடந்தார்.
3 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார் அவர்களின் உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது.
கருத்து வேறுபாடு காரணமாக அனிஷாபாத்திமா தனது கணவரை பிரிந்து சென்று விட்டார். இதன்பின்பு அவர் தமிழகத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அவ்வாறு வரும்போது மதுரவாயலில் உள்ள தனது பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் வந்த அனிஷாபாத்திமா மகன்களை பார்க்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அபீப்ரகுமானுக்கும் சரியான வேலை இல்லாத காரணத்தால் வருமானம் குறைந்து விட்டது.
இதனால் மகன்களை பார்த்துக்கொள்வதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. வருமானம் இல்லாததால் மகன்களை பள்ளியில் கூட சேர்க்க முடியவில்லை. அபீப்ரகுமான் ஏற்கனவே மனைவி பிரிந்து சென்று விட்ட விரக்தியில் இருந்து வந்தார். மேலும், வருமானம் இல்லாததால் கூடுதல் மன உளைச்சல் அடைந்தார். இதனையடுத்து மகன்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்பு அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்த அபீப்ரகுமானின் செல்போனை கைப்பற்றிய போலீசார் கடைசியாக அவர் யாருக்கு பேசி உள்ளார்? அவரது தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story