தம்பியை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் கைது
100 ரூபாய் தகராறில் தம்பியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை சிவாஜி நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த வாலிபர் உயிரிழந்து இருந்தார். வாலிபரின் பெற்றோர், நாற்காலியில் ஏறி நின்றபோது தவறி விழுந்து அவர் பலியானதாக கூறினர்.
சந்தேகமடைந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வாலிபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
பலியான வாலிபர் சிவாஜிநகர் பகுதியை சேர்ந்த சபிக்(வயது24). இவர் தனது பெற்றோர் மற்றும் அண்ணன் ஜாவித் (26), தம்பி ஹாவித் (22) ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஜாவித், ஹாவித்திடம் ரூ.100 கேட்டுள்ளார். ஹாவித் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக்கண்ட சபிக் சகோதரர்கள் இடையே நடந்த சண்டையை சமாதானம் செய்ய முயன்றார். மேலும் அவர் ஹாவித்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜாவித், தம்பி சபிக்கை கழுத்தை பிடித்து நெரித்தார். இதனால் சபிக் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜாவித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story