பட்டினப்பாக்கம், ராட்சத அலையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இழுத்துச்செல்லப்பட்டன
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் ராட்சத அலையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இழுத்துச்செல்லப்பட்டன. வீடுகளை இழந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதியில் மீனவர்கள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வானிலை மாற்றத்தால் கடல் அலை பேரிரைச்சல் உடன் ஆக்ரோஷமாக கரையை வந்து மோதுவதும், பகல் நேரங்களில் சத்தம் இன்றி சாந்தமாக கிடப்பதும் என கண்ணாமூச்சி ஆடி வருகிறது.
கடலில் தொடரும் இந்த மாற்றத்தை அந்த பகுதி மக்கள் அபாய எச்சரிக்கையாகவே கருதுகின்றனர். இதனால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும்போது எழும் ராட்சத அலை கரையோரம் உள்ள குடிசை வீடுகளின் உள்ளே ஆக்ரோஷமாக புகுந்துவிடுகிறது. மேலும் மண் அரிப்பை ஏற்படுத்தி கரையோரம் உள்ள குடிசை வீடுகளை அப்படியே கடலுக்குள் சுருட்டி இழுத்துச்சென்றுவிடுகிறது.
இதனால் கடற்கரையோரம் இருந்த பல வீடுகள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் ராட்சத அலையால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் அலையின் கோர தாண்டவத்தால், கரையோரத்தில் குறிப்பிட்ட சில அடி தூரத்துக்கு கட்டிட இடிபாடுகளாகவே காட்சி அளிக்கின்றது.
கடல் அலையால் வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி, சமையல் சாமான்கள், துணிமணிகள், பொக்கிஷம் போல பாதுகாத்து வைக்கப்பட்ட புகைப்படங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளின் புத்தகங்கள், மீன்பிடி வலை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அடையாள என அனைத்தும் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டன.
இதற்கிடையே ராட்சத அலை காரணமாக சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதியில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்கள் இடிபாடுகளுக்குள் கிடந்த தங்களுடைய பொருட்களை மீட்டு திறந்த வெளியில் போட்டு வைத்துள்ளனர். வசிக்க இடம் இன்றி, யாரும் ஆதரவு கரம் நீட்டாத சூழலில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்துடன் உள்ளனர்.
வீடுகளை கடல் அலை இழுத்துச்சென்றதால் அதில் சிக்கி, சுமார் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய மீன்பிடி வலைகளும் சேதமாகியுள்ளன. வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசு உடனடியாக ஆதரவு கரம் நீட்டவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து ராட்சத அலையால் வீட்டை இழந்த சவுந்தரி என்ற பெண் கூறியதாவது. சுனாமிக்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வகையில் கடல் அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று (நேற்று) அதிகாலை என்னுடைய வீடு கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுவிட்டது. வீட்டில் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நாசமாகிவிட்டன. வழக்கமாக நாங்கள் 6 பேர் வீட்டில் தூங்குவோம். அதிர்ஷ்டவசமாக நேற்று (நேற்று முன்தினம்) இரவு தூங்காததால் உயிர் பிழைத்தோம்.
இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக ராட்சத அலையை கட்டுப்படுத்தும் வகையில் கரையோரத்தில் பெரிய கற்களை போட்டு தடுப்புகள் அமைக்கவேண்டும். மேலும் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் பட்டினப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள இடத்தில் அரசு தரப்பில் குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும். எங்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ வந்து பார்வையிடாதது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ராட்சத அலையில் வீடு இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய ஆயிஷா என்ற பெண் கூறியதாவது:-
கடந்த 3 வாரங்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. இன்று (நேற்று) அதிகாலை ராட்சத அலையில் சிக்கி எங்களுடைய வீடும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிலில் படுத்திருந்த நான், என்னுடைய கணவர் ராஜா முகமது, மகள்கள் காதர் நிஷா, சயிதானி ஆகிய 4 பேரும் இடிபாட்டில் சிக்கினோம். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு எழுந்து மயிர் இழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்.
என்னுடைய கணவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வீடு இடிந்து விழுந்ததால் இப்போது வசிக்க இடம், வருமானம், அடுத்த வேளை சாப்பாடு இன்றி நடுத்தெருவில் நிற்கிறோம். ஆனால் இதுவரை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ எங்களுடைய பகுதிக்கு வந்து பார்த்து ஆறுதல் கூட சொல்லவில்லை. ஓட்டு கேட்டு வந்தவர்கள் யாருமே இப்போது எங்களுக்கு சிறிய உதவிகள் கூட செய்யவில்லை.
எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோதெல்லாம் ஜெயலலிதா இருந்தபோது தேவையான உதவிகளை செய்தார். அவர் இருந்திருந்தால் விடிவுகாலம் பிறந்திருக்கும். ஜெயலலிதா இல்லாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏ., எம்.பி. என யாருமே இங்கு வந்து எப்படி நடந்தது? என்று ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. கரையோரத்தில் வசிப்பவர்கள் இப்போது நாதி இல்லாமல் அனாதை ஆகிவிட்டோம். கடல் அலை எங்கள் உடைமைகளை எல்லாம் இழுத்துச்சென்றுவிட்டது.
இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு எங்கே? வாக்காளர் அடையாள அட்டை எங்கே? என்று கேட்பது நியாயமற்றது. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கரையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்கவேண்டும். தடுப்பு சுவர் அமைத்தால் கடல் அலையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். மேலும் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story