மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அரசு ஆய்வு குழுவை அமைத்தது
ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க மராட்டிய அரசு ஆய்வு குழுவை அமைத்துள்ளது.
மும்பை,
சோலாப்பூர் மாவட்டம் மாதா தாலுகாவில் உள்ள உஜானி அணையில் 1,000 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சூரிய மின் உற்பத்தி நிலைய திட்டத்தால் அப்பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை அறிந்துகொள்ளவும், அணைநீரின் மாதாந்திர நீர்மட்டத்தை கணக்கிடவும் ஆய்வு குழு ஒன்றை மராட்டிய அரசு அமைத்துள்ளது.
இந்த ஆய்வு குழு அணைப்பகுதியிலேயே தங்கியிருந்து தங்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க மிக நீண்ட சமதளமான நிலப்பரப்பு தேவை. ஆனால் அவ்வளவு பெரிய காலி இடத்தை கண்டுபிடிப்பது கடினமானதாகும்.
எனவே தான் நாங்கள் மிகப்பெரிய அணைகளின் ஒன்றான உஜானி அணையில் உள்ள நீர்நிலை மீது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க முடிவு செய்தோம்.
இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ளவே இந்த ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாதம்தோறும் நீரின் மட்டத்தை அளவிடும். நீரின் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை கணக்கிட்டபின் இந்த திட்டத்திற்கான அனுமதியை பெறுவதற்கான வேலைகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story