பட்ஜெட் தயாரிப்பு குறித்து குமாரசாமி ஆலோசனை


பட்ஜெட் தயாரிப்பு குறித்து குமாரசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 27 Jun 2018 6:12 AM IST (Updated: 27 Jun 2018 6:12 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு துறை மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பட்ஜெட் தயாரிப்பு குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் முதல்-மந்திரி குமாரசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், கூட்டுறவு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பள்ளி கல்வி, நகராட்சி நிர்வாகம், துறைமுகம், நகர வளர்ச்சி ஆகிய துறைகளின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் குமாரசாமி பட்ஜெட் தயாரிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அந்த துறைகளுக்கு தேவையான நிதி, திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து விரிவான விவரங்களை குமாரசாமி கேட்டு பெற்றார். இந்த பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

Next Story