தூத்துக்குடியில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல் விளக்கம்


தூத்துக்குடியில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல் விளக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2018 2:30 AM IST (Updated: 27 Jun 2018 7:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல் விளக்கம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல் விளக்கம் நடந்தது.

பேரிடர் மேலாண்மை 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும், பேரிடர் மேலாண்மை குறித்த கருத்துக்களை மாணவ–மாணவிகளுக்கு விளக்குவதற்காக ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் பேரிடர் குறித்து மாணவ–மாணவிகளுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

செயல்முறை விளக்கம் 

இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை குறித்த செயல்முறை விளக்க பயிற்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் குமரேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து தீயணைப்பு படையினர் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். அப்போது தீப்பிடித்தால் தப்பிப்பது, வெள்ளம், புயல் காலங்களில் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் விளக்கி கூறினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினி கவுசல், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் வித்யாலயம், சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story